Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது” -கார்த்தி சிதம்பரம் எம்.பி

11:49 AM Mar 24, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.  

Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ நாடாளுமன்றத்தில் எனது கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்து வந்துள்ளதாகத் தெரிவித்தவர். தமிழக முதல்வரின் ஆசியோடு வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரிகளைச் சிவகங்கை தொகுதிக்குக் கொண்டு வந்துள்ளேன். வேலு நாச்சியார் பெயரில் பெண்களுக்கான காவலர் பயிற்சி மையத்தை சிவகங்கையில் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறேன்.

ரயில்வே பொருத்தவரை நிறையக் கோரிக்கைகள் வைத்துள்ளேன். ஆனால் ஒன்றுக்கும்
மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்காமல் எய்ம்ஸை கொண்டு வந்தோம் என மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது.

தமிழக மக்கள் ஒரு ரூபாய் வரி கட்டினால் அவர்களுக்குத் திரும்ப வருவது 29 காசு
தான். அதே சமயம் உத்தரப்பிரதேச போன்ற வட மாநிலங்கள் ஒரு ரூபாய் வரி கட்டினால்
அவர்களுக்குத் திரும்பக் கிடைப்பது 2 ரூபாய் 73 காசுகள். மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி,ராகுல் காந்திக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் பேசினார்.

Tags :
BJPCongressElection2024karthi chidambaram
Advertisement
Next Article