For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் - மத்திய அரசு அறிமுகம் !

12:55 PM Jan 06, 2025 IST | Web Editor
வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள்   மத்திய அரசு அறிமுகம்
Advertisement

இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

இந்தியக் கல்வி முறை சர்வதேச அளவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.  இந்தியாவிற்கு வந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புபவர்களுக்கு மாணவர் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் யோகா, வேத கலாச்சாரம், இந்திய நடனம் மற்றும் இசை ஆகியவை அடங்கும்.

அந்த வகையில் இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட் விசா' மற்றும் 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' விசா ஆகிய இரண்டு சிறப்பு பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் 'ஸ்டடி இன் இந்தியா' (SII) வலைதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்ஐஐ வலைதளத்தில் பதிவு செய்யும் தகுதியான வெளிநாட்டு மாணவர்களுக்கு இ-ஸ்டூடண்ட் விசா வழங்கப்படவுள்ளது. அதேபோல் இ- ஸ்டூடண்ட் விசா வைத்திருக்கும் நபர்களைச் சார்ந்தவர்களுக்கு இ- ஸ்டூடண்ட்-எக்ஸ் விசா வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்கள் இந்திய விசாக்களை வலைதளத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பிப்பவர் குறித்த தகவல்கள் அவரின் எஸ்ஐஐ ஐடி மூலம் சரிபார்க்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் எஸ்ஐஐ வலைதளத்தில் விண்ணப்பிப்பது கட்டாயம்.

எஸ்ஐஐயுடன் ஒப்பந்தத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பத்தை ஏற்றவுடன் அவர்கள் இந்த இரு சிறப்பு விசாக்களுக்கு பதிவு செய்யலாம். முழுநேரம், பகுதிநேரம், இளநிலை, முதுநிலை, பிஹெச்டி என மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இ-ஸ்டூடண்ட் விசா வழங்கப்படுகிறது. படிப்பின் கால அளவை பொருத்து 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். தேவையெனில் அதை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement