For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன" - #AdoptionResourceCommission தகவல்!

08:57 AM Aug 26, 2024 IST | Web Editor
 கடந்த 5 ஆண்டுகளில் 18 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன     adoptionresourcecommission தகவல்
Advertisement

கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

தத்தெடுக்கப்படும் சிறப்பு குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவர்கள் தத்தெடுக்கப்படும் விகிதம் இன்னும் குறைவாகவே இருக்கிறது.கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளி குழந்தைகள் வெறும் 1,404 பேர் எனவும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 5-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்கு காத்திருப்பதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுகிறது.  2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்படுவதற்கு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : கொலை வழக்கில் சிக்கிய நடிகர் #darshan | சிறையில் சொகுசு வாழ்க்கை! - வைரலாகும் புகைப்படம்...

சிறிதளவு குறைபாடு இருந்தாலும், சிறப்பு குழந்தைகளை தத்தெடுக்க யாரும் முன்வருவது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் முன்னாள் தலைவர் தீபக்குமார் சுட்டிக்காட்டினார். தான் தலைவராக இருந்தபோது, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகமாக தத்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement