மிடில்கிளாஸ் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு..!
முண்டாசுப்பட்டி, மரகத நாணயம் போன்ற நகைச்சுவை படங்களில் நடித்தவர் முனிஷ்காந்த். இவர் தற்போது மிடில் கிளாஸ் என்னும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் முனிஷ்காந்திற்கு மனையவியாக விஜயலட்சுமி நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இப்படத்தை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படம் மிடில் கிளாஸ் தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை கதையாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வரும் 21ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.
