Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செல்போன் விலை குறைகிறது - பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!

01:19 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

செல்போன் மற்றும் செல்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

Advertisement

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது.

கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.

அப்போது, செல்போன் மற்றும் செல்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  இதன்மூலம் நாடு முழுவதும் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. மேலும், புற்றுநோய்களுக்கான 3 மருந்துகளின் சுங்க வரி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார். தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார.

Tags :
#budgetsession#financeministerமத்தியபட்ஜெட்2024Budget 2024Budget 2024-25Budget DayBudget Session 2024BUDGET WITH NEWS7TAMILEconomicsIndialoksabhaLokSabha2024NarendramodiNDAGovtNews7Tamilnews7TamilUpdatesNirmalaSitharamanparliamentPMOIndiarajyasabhaUnionBudget
Advertisement
Next Article