For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024-ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!

05:05 PM Dec 31, 2024 IST | Web Editor
2024 ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்
Advertisement

2024 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Advertisement

சமீப காலமாக விவாகரத்து சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. 2024 ம் ஆண்டில் ஏற்கனவே பிரிந்த வாழ்ந்துவந்த ஜோடிகள் விவாகரத்து அறிவித்ததும், யாரும் எதிர்பார்க்காத ஜோடிகள் திடீரென பிரிவை அறிவித்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த ஆண்டு விவாகரத்து அறிவித்த பிரபங்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் 2004 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், 20 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு நவம்பரில் விவாகரத்தை அறிவித்தனர். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

GV பிரகாஷ் மற்றும் சைந்தவி:

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தான் சிறு வயது முதல் காதலித்து வந்த பின்னணி பாடகியான சைந்தவியை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 11 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக மே 13 ஆம் தேதி அறிவித்தார். இவர்களுக்கு அன்பி என்ற ஒரு மகள் உள்ளார்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி:

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் . இந்த நிலையில் 15 ஆண்டு கால திருமண வாழ்கைக்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. நீண்ட கால யோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாயிரா பானு:

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு, ஆகியோர் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு நவம்பரில் விவாகரத்தைக் அறிவித்தனர். அவர்களுக்குத் கத்திஜா, ரஹீமா, மற்றும் ஏ.ஆர். அமீன் என 3 பிள்ளைகள் உள்ளனர்.

சீனு ராமசாமி - தர்ஷனா:

இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்வதாக டிசம்பர் 12 ம் தேதி அறிவித்தார். பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியுடனான 17 வருட திருமண வாழ்வை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிச்:

இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டைச் சேர்ந்த மாடலிங்கான நடாஷா ஸ்டான்கோவிச்சை கடந்த 2020 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜூலை 18ஆம் தேதி ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். அதற்கு முன்னதாக ஷிகர் தவான், முகமது ஷமி, சானியா மிர்சா ஆகியோர் விளையாட்டு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக்:

சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் தம்பதியினர் திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக்கின் விவாகரத்து நடவடிக்கைகள் 2022 இல் தொடங்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று வெளியேறினார். இவர்களுக்கு இசான் மிர்சா மாலிக் என்ற மகன் உள்ளார்.

ஈஷா தியோல் மற்றும் பாரத் தக்தானி:

ஈஷா தியோல் மற்றும் பாரத் தக்தானி ஆகியோர் 12 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்தை அறிவித்தனர். அவர்கள் தங்கள் மகள்களான ராத்யா மற்றும் மிராயா ஆகியோருக்கு இணை பெற்றோராக உள்ளனர்.

டால்ஜித் கவுர் மற்றும் நிகில் படேல்:

டால்ஜித் கவுர் மற்றும் நிகில் படேல் ஆகியோர் மார்ச் 2023 இல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு மே மாதம் விவாகரத்து செய்தனர். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊர்மிளா மடோன்கர் மற்றும் மொஹ்சின் அக்தர் மிர்:

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் மற்றும் தொழிலதிபர் மொஹ்சின் அக்தர் மிர் ஆகிய இருவரும் பிப்ரவரி 4, 2016 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து பெற்றனர்.

Tags :
Advertisement