சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் மருத்துவமனையில் அனுமதி!
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
06:51 PM Sep 06, 2025 IST | Web Editor
Advertisement
மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் பிரவீன் சூட் ஆவார். இவர் இன்று தனிப்பட்ட முறையில் இன்று ஐதராபாத் வந்துள்ளார். அதே நேரத்தில் ஐதராபாத் சிபிஐ அலுவலத்திற்கு சென்று ஆலோசனையும் நடத்தியுள்ளார். தொடர்ந்து அவர் நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் பகுதிக்கு சென்று திரும்புகையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதனை தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவ்ருக்கு அசிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக பிரவீன் சூட் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஐதராபாத்தில் மருத்துவ மனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.