"முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும்" - எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்!
விழுப்புரத்தில் இன்று விசிக பொதுச்செயளாலர் ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திண்டிவனத்தில் பட்டியலின இளநிலை உதவியாளர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி திண்டுவனத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சி அமைப்புகளில் தொடர்ச்சியாக பட்டியல் சமூகத்திற்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் காட்டப்படுகிற சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் துணை தலைவர் பதவிகளில் பட்டியலின சமுகத்தினருக்கு வழங்க உரிய சட்டத்திருத்ததினை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். சாதிய பாகுபாடு நடைபெறும் இடங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யப்படுகிற வழக்குகளில் மாநில எஸ் சி எஸ் டி ஆணையமே உண்மைக்கமாறான வழக்குகள் என கூறி பல வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இது வேதனை அளிக்கிறது.
ஜி எஸ் டியில் மத்திய அரசு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது வரவேற்கதக்கது. கடந்த எட்டு ஆண்டுகளாக ஜி எஸ் டி வரியை குறைக்க கூறியும் செய்யாத அரசு இப்போது செய்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. ஜி எஸ் டியில் வரிகுறைக்கப் பட்டாலும் செஸ் வரியில் ஆண்டுக்கு ஒன்னரை லட்சம் வருவாய் ஈட்டப்படுகிறது. அப்படி ஈட்டப்படும் வருவாய் மக்களிடம் பெற்று கார்பரேட் நிறுவனங்களுக்கு தானம் செய்யும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.
செஸ் வரி விதிப்பினை வைத்து கொண்டே ஜி எஸ் டியில் வரி குறைத்துவிட்டோம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. பட்டியலின சமூக மக்கள் உரிமைகளை பற்றி கையில் எடுக்கவும் பேசுவதற்கும் பாஜகவிற்கும் அதிகமுகவிற்கும் தார்மீக உரிமை இல்லை”
எனத் தெரிவித்துள்ளார்.