Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - மார்.27க்கு ஒத்திவைப்பு!

வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான அரசின் அறிக்கைக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு மார்ச் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
03:30 PM Jan 24, 2025 IST | Web Editor
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது தமிழக அரசு தரப்பில், சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரிதான் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு மனுதாரர் தரப்பில், குற்றப்பத்திரிக்கையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றும், அரசின் இந்த அறிக்கைக்கு விரிவான பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர். குற்ற பத்திரிக்கை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் சுட்டிக்காட்டினர்.

பின்னர், அரசின் அறிக்கைக்கு மார்ச் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, மார்ச் 10ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags :
CBCIDCBImadras highcourtVengavayal Issue
Advertisement
Next Article