For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் - நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

03:54 PM Jul 18, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல்   நவாஸ்கனி   ராபர்ட் புரூஸ்  மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு
Advertisement

நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் வெற்றியை
எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.

Advertisement

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, 1 லட்சத்து 66
ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டு 3 லட்சத்து 42 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

இதே போல், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ், 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 676 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3 லட்சத்து 78 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்நிலையில், நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் வெற்றியை எதிர்த்து முறையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும்,
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மனுக்கள்
விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள்
தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி, 45 நாட்கள் அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகிய மூவரும் ஒரே நாளில் நேரில் வந்து தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
Advertisement