மதுரை உசிலம்பட்டி அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!
07:40 AM May 22, 2024 IST
|
Web Editor
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வு சோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Advertisement
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டி பகுதியில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பூச்சிபட்டியைச் சேர்ந்த மச்சக்காளை, பிரபு என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Article