For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கடையேழு வள்ளல்களை பார்த்ததில்லை....ஆனால் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம்... நடிகர் சூரி உருக்கம்...

04:50 PM Dec 28, 2023 IST | Web Editor
கடையேழு வள்ளல்களை பார்த்ததில்லை    ஆனால் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம்    நடிகர் சூரி உருக்கம்
Advertisement

கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை....ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம்... என நடிகர் சூரி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisement

விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரி தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.  வெற்றி மாறன் கதையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கும்பகோணம்,  தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இதில் சசிகுமார்,  சமுத்திரக்கனி,  உன்னி முகுந்தன்,  ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று தேனியில் நடைபெற்று வந்த நிலையில் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு படக்குழுவினர் வருத்தமுற்றனர்.  பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர்கள் சசிகுமார்,  சூரி, உன்னி முகுந்தன் காலமான விஜயகாந்த் புகைப்படத்திற்கு  மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.  பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  இந்த நிகழ்வில் நடிகர்
சசிகுமார், நடிகர் சூரி, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், திரைப்பட இயக்குனர்
துரை செந்தில் மற்றும் தயாரிப்பாளர் படக் குழுவினர் மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.

பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூரி,

விஜயகாந்த் நேர்மையான மனிதர் அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தை, ரசிகர்களை,  கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  சினிமா படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக மதித்து நடக்கக் கூடியவர்.  படத்தில் எப்படி மக்களுக்காக நடித்தாரோ நிஜத்திலும் மக்களுக்காக நல்ல தலைவராக குரல் கொடுத்தார். ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய இடத்தை தொட்டிருப்பார் என கூறினார்.

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

Tags :
Advertisement