For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கேப்டன் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து!" - '#LubberPandhu' திரைப்படம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

09:23 AM Sep 29, 2024 IST | Web Editor
 கேப்டன் எங்கள் குடும்ப சொத்து அல்ல  மக்கள் சொத்து        lubberpandhu  திரைப்படம் குறித்து  பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Advertisement

திரைப்படங்களில் கேப்டன் பாடல் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை யாரிடமும் கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில், இந்த படத்தில் அதிகமாக விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. கனா, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவருமான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படம் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வதந்தி என்ற வெப் தொடரின் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரிலீஸ்க்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த லப்பர் பந்து திரைப்படம், கடந்த செப்டம்பர் 20-ந் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் பாராட்டி வருகினறனர்.

ஒரு திரைப்படத்தில், நாயகன் சினிமா ரசிகனாக இருந்தால், எம்.ஜி.ஆர், சிவாஜி, அல்லது ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரசிகராகத்தான் இதுவரை காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் முதல்முறையாக, லப்பர் பந்து படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ், கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொன்மனச்செல்வன் படத்தில் இடம் பெற்ற ‘’நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’’ என்ற பாடல், பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது.

தற்போது இந்த படம் குறித்து பேசிய, கேப்டன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, லப்பர் பந்து படம் சிறப்பாக உள்ளது. இப்போ தான் படம் பார்த்தேன். அந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் படம் வெளியீட்டுக்கு முன்பே இந்த படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி இப்போது நாங்கள் படம் பார்தோம். படம் முழுவதும் கேப்டன் ரெப்ரன்ஸ் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோட் படத்தில் முறையாக அனுமதி பெற்று ஏ,ஐ.உதவியுடன் படத்தில் கேப்டனை பயன்படுத்தினார்கள். லப்பர் பந்து படத்தில் கேப்டனை வால் போஸ்டர் வகையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அனைவருமே கேப்டனின் நினைவுகளை கொண்டாடுகிறார்கள். அவர் எங்கள் குடும்ப சொத்து அல்ல. மக்கள் சொத்து. மக்கள் கொண்டாடுவதை பார்க்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement