Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸுக்கு 2 நிபந்தனைகள் விதித்த மம்தா பானர்ஜி!

08:11 PM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் மேலும் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என மம்தா பானர்ஜி நிபந்தனை விதித்துள்ளார்.

Advertisement

ஒதுக்கிய நிலையில், அவர்கள் மறுத்ததால்  தற்போது காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘INDIA’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் ‘INDIA’ கூட்டணியில் அங்கம் வகித்தன.

தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தன. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகாரின் முதலமைச்சருமான நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் ஐக்கியமானார்.

இந்நிலையில், தற்போது, காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு குறித்து மம்தா பானர்ஜி மீண்டும் தெரிவித்திருக்கும் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து மம்தா பானர்ஜிபேசியதாவது:

சட்டப்பேரவையில் உங்களுக்கு ஒரு உறுப்பினர்கூட இல்லை. நாங்கள் உங்களுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைத் தருகிறோம் என்று காங்கிரஸிடம் கூறினேன். ஆனால் அவர்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதனால் நான் உங்களுக்கு ஒரு தொகுதிகூட தரமாட்டேன் என்று தெரிவித்தேன். காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பாஜகாவை தனித்து நின்று வென்று காட்டுவோம். மேலும், காங்கிரஸ் சிபிஎம்-ஐயை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சிபிஎம் கட்சியினர் என்னை பலமுறை உடல் ரீதியாக தாக்கியுள்ளனர். கொடூரமான முறையில் நான் தாக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நலன் விரும்பிகளால் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். இடது சாரிகளை என்னால் மன்னிக்க முடியாது. அதுவும் சிபிஎம்-ஐ என்னால் மன்னிக்கவே முடியாது. எனவே இன்று சிபிஎம் உடன் இருப்பவர்கள், பாஜகவிலும் இருக்கலாம். அவர்களை நான் மன்னிக்க மாட்டேன்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

Tags :
CongressIndiaINDIA PartiesMallikarjun KhargeMamata banerjeeNews7Tamilnews7TamilUpdatesParliamentary elections 2024
Advertisement
Next Article