கேன்ஸ் திரைப்பட விழா வரலாறு படைத்தது இந்தியா - சிறந்த நடிகைக்கான விருது வென்றார் அனசுயா சென்குப்தா!
கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய நடிகையான அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கும்.
இந்த நிலையில், இந்திய நடிகையான அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, ’தி ஷேம்லெஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான ’அன் செர்ட்டன் ரெகார்ட்’ விருதை வென்றுள்ளார்.
இத் திரைப்படத்தினை பல்கேரிய திரைப்படத் தயாரிப்பாளர் கான்ஸ்டான்டின் போஜனோவ் எழுதி, இயக்கியுள்ளார். விருது பெற்றதைத் தொடர்ந்து அனசுயா அளித்த பேட்டியில், ”எங்கள் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, நான் பரவசத்துடன் நாற்காலியில் இருந்து குதித்தேன்!" என்று தெரிவித்தார்.
காவல் அதிகாரியை கொலை செய்து விட்டு டெல்லி பாலியல் தொழில் செய்யும் இடத்தில் சிக்கிக் கொள்ளும் ரேணுகா, அங்கு தேவிகா என்ற பெண்ணால் ஈர்க்கப்படுகிறார். அதற்கு பின் இருவரும் சந்திக்கும் சவால்கள் பற்றி இந்த படம் பேசுகிறது.
இந்த படத்தில் அனசுயாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்று இந்திய சினிமாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார். Shameless திரைப்படத்தோடு sunflowers were the first ones to know என்ற கன்னட குறும்படமும், bunnyhood ஆகிய படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் la cinef selection என்ற திரைப்பட தரவரிசையில் முதல் மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன. டாக்டராக இருந்து இயக்குநரான சிதானந்தா நாயக் இப்படத்தை இயக்கியுள்ளார்.
Le Jury Un Certain Regard révèle son Palmarès #Cannes2024 🏆
La sélection qui célèbre les découvertes et fait émerger de nouvelles tendances, de nouvelles voies et de nouveaux pays de cinéma a proposé 18 longs métrages dont 8 premiers films concourant également pour la Caméra… pic.twitter.com/UhFr0Ap69l
— Festival de Cannes (@Festival_Cannes) May 24, 2024