For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி” - அரிட்டாபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி” என அரிட்டாபட்டி மக்களின் நன்றி தெரிவிக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
06:55 PM Jan 26, 2025 IST | Web Editor
“டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி”   அரிட்டாபட்டியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான ஏல ஒப்பந்தமும் கோரப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தலமான அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் திட்டம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

Advertisement

எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூர் மற்றும் 48 கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களின் போராட்டத்திற்கு அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர். தொடர்ந்து மக்களின் போராட்டத்தால் இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து மதுரை கிராம மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து, தங்களுக்குன் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று பாராட்டு விழா நடைபெற்றது. காலை குடியரசு தின விழாவை முடித்த முதலமைச்சர், மதுரை புறப்பட்டார். தொடர்ந்து மாலை மதுரை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பொதுமக்கள் அரிட்டாபட்டி வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து அரிட்டாபட்டி மக்களின் நன்றி தெரிவிக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

“அரிட்டாப்பட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் நேற்று என்னை கோட்டையில் சந்தித்து பேசினார்கள். மத்திய அரசு டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கூறினார்கள். உங்களால்தான் திமுக ஆட்சி கட்டமைக்கப்பட்டது. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள்.  அனைத்து கட்சிகள் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்தது உங்களால் கிடைத்த வெற்றி என மக்கள் கூறினார்கள். டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி. சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் ஒரு முறை உங்களை சந்திக்க வருவேன். நீங்கள் யாருக்கு எதிராக வாக்களிக்க உள்ளீர்கள் என தெரியும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன். உங்கள் வீட்டு பிள்ளையாக உங்களோடு இருப்பேன்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement