நான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? - அருணாச்சப் பிரதேச விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி!
அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெயர் மாற்றும் படலத்தின் நான்காவது முறையாக ஏறத்தாழ 30 இடங்களில் பெயர்களை சீனா மாற்றி புதிய பெயர்களை நேற்று முன்தினம் வெளியிட்டு இந்தியாவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டி சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வரும் சீன அரசு, அதனை தெற்கு திபெத் எனக் குறிப்பிட்டு வருகிறது. மேலும், அருணாசலப் பிரதேசத்துக்கு சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜாங்னனில் எனப் பெயரிட்டு அழைத்து வருகிறது.
இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்பு கிராமங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு குறுகிய நிலப் பகுதிகளுக்கு திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி புதிய பெயர்களை சூட்டி ஹாங்காங் நாளிதழில் சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.