For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?" - சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு!

05:50 PM Apr 06, 2024 IST | Web Editor
 இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா     சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு
Advertisement

"இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?" என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து வாக்கு சேகரித்த ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

 வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில்  சென்னை அயனாவரம் நம்மாழ்வார் பேட்டை பகுதியில் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ஸ்மிருதி ராணி தெரிவித்ததாவது..

” பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் தங்கள் பிரதமர் வேட்பாளர் மோடி என்று பெருமையுடன் சொல்லலாம்.  ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தங்களது பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? இந்தியாவின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் தொலைநோக்குத்
திட்டமாக உள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியின் திட்டங்கள் என்னவென்று சொல்ல முடியுமா?

இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு தலைவரும் கிடையாது, நீதியும் கிடையாது. அவர்கள் நாட்டை சூறையாடத்தான் செயல்படுகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்திற்காக சென்றபோது, அங்கே இந்தியா கூட்டணி கட்சியினரே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர். ஆனால் டெல்லியில் நட்பு பாராட்டுகின்றனர்.

கலாச்சாரமிக்க தமிழகத்தில் உள்ள திமுக தலைவர்கள் சனாதன தர்மத்தையும் இந்து
மதம் குறித்தும் விமர்சனம் செய்த போது நாடே எதிர்ப்பு தெரிவித்தது. தேசம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நமது குடும்பம் மோடி குடும்பம். நமது குடும்பத்திற்கு வாக்களியுங்கள், அவர்கள் குடும்பத்திற்கு வாக்களிக்காதீர்கள் “ என ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.

Tags :
Advertisement