Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எதிர்க்கட்சியாக செயல்பட இந்தியா கூட்டணி முடிவு? - டெல்லியில் இருந்து களநிலவரங்களுடன் நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர்!

11:32 AM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவையில் எதிர்க்கட்சியாக செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரம், அந்த கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரை இழுத்து, INDIA கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடும் எனவும் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இதனிடையே, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (ஜூன் 5) நடைபெற்றது. அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என, இந்தியா கூட்டணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், விருப்பமுள்ள கட்சிகள் INDIA கூட்டணிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா கூட்டணியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்துள்ளனர். அதன்படி, ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய பலரும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. INDIA கூட்டணியை பெருமளவில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தது, கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெல்ல முக்கிய பங்காற்றியது போன்ற காரணங்களால், ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, டெல்லியில் இருந்து நமது நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் அளித்த கூடுதல் விவரங்களை காண:

Tags :
CongressDMKElection2024Elections2024INCIndiaLoksabha Elections 2024MK StalinNews7Tamilnews7TamilUpdatesRahul gandhi
Advertisement
Next Article