தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகள் ஒன்று தீபாவளி ஆகும். இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் இந்தியர்களும் கொண்டாடுப்படுகின்றது. இந்தாண்டு தீபாவளியானது வரும் (அக்) 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் 'ஏபி 268' என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாகாண ஆளுநர் கவின் நியூசம் மசோதாவிற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இந்த மசோதாவின் படி, தீபாவளியன்று கலிபோர்னியா மாகாணத்தில், சமூகக் கல்லூரிகள், பொதுப் பள்ளிகள் முதலியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படும். அத்துடன் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.
ஏற்கெனவே, 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணமும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்திருந்த நிலையில் இன்று மூன்றாவது அமெரிக்க மாகாணமாக மூன்றாவதாக கலிபோர்னியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.