For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சிஏஏ - திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” - திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

05:37 PM Apr 17, 2024 IST | Web Editor
“சிஏஏ   திரும்பப் பெறப்படும்  என்ஆர்சி  நிறுத்தப்படும் ”   திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
Advertisement

சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்ஆர்சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

'தீதியின் உறுதிமொழிகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தத் தேர்தல் அறிக்கையில், மொத்தம் 10 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில்,

  • தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 400 தினசரி ஊதியத்துடன் 100 நாள் வேலைக்கான உத்தரவாதம்.
  • அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவச வீட்டுவசதி.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 இலவச எரிவாயு சிலிண்டர்கள்.
  • அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வீட்டு வாசலில் இலவச ரேஷன் விநியோகிக்கப்படும்.
  • எஸ்சி / எஸ்டி பிரிவினரின் உயர்கல்விக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும்.
  • முதியோர் உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்படும்.
  • சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.
  • பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை நிலைப்படுத்த நிதி
  • 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்களுக்கு பயிற்சி.
  • சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்.
  • என்ஆர்சி நிறுத்தப்படும்.
  • நாட்டில் பொது சிவில் சட்டம் இருக்காது.
  • நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான கன்னியஸ்ரீ போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்

போன்ற வாக்குறுதிகளை திரிணமூல் காங்கிரஸ் வழங்கியுள்ளது. இந்த வாக்குறுதிகள் பெங்காலி, ஆங்கிலம், இந்தி, உருது, நேபாள், சந்தால், ஆல் சிகி ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

Tags :
Advertisement