குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு!
நாட்டின் 14வது குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் கடந்த ஜூலை 21ம் தேதி மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் செப்.09ம் தேதி நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் இதற்கான விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் குடியரசு துணை தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.