குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
நாட்டின் 14வது குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் கடந்த ஜூலை 21ம் தேதி மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் செப்.09ம் தேதி நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள், வெங்கையா நாயுடு, ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.