For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!

03:39 PM Dec 29, 2023 IST | Web Editor
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்   முதலமைச்சர் மு க  ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
Advertisement

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

Advertisement

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பேருந்து நிலையம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி மதிப்பில் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

மொத்தமாக 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் நவீன தொழில் நுட்பத்தில் 2 அடிததளங்கள் தரை தளம், முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

இதையும் படியுங்கள் : விஜயகாந்த் மறைவு – ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

பேருந்து நிலையத்தின் பணிகள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் மழைநீர் வடிகால் அமைப்பது, பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பணிகள் முழுமையாக முடிவடையந்த நிலையில் பேருந்து நிலையத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement