பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து... 3 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு நேற்று (மார்ச் 22) தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் ராமன்பூர் கட் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் தூங்கியதே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.