#Pakistan-ல் பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு இன்று பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில், அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்கள் : கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மட்டும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.