Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 14 வயது சிறுமி உயிரிழப்பு... 20க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம், 14 வயது சிறுமி பலி.
04:33 PM Apr 15, 2025 IST | Web Editor
Advertisement

கேரள மாநிலம் இடுக்கி அருகே கட்டப்பனா பகுதியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, நேரியமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி டிவைடரில் மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

Advertisement

இந்த விபத்தில் பேருந்தில் தாயுடன் பயணம் செய்த 14 வயது சிறுமி அனீதா பென்னி பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். விபத்தின் போது பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி ஜன்னலை உடைத்து வெளியே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
bus accidentgovt busKeralaKSRTC
Advertisement
Next Article