கென்யாவில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 25 பேர் உயிரிழப்பு!
கென்யாவில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
07:54 AM Aug 10, 2025 IST | Web Editor
Advertisement
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு சென்ற பேருந்தில் சுமார் 50 பேர் இருந்துள்ளனர். இவ்ரகள் அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது ககமேகா நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
Advertisement
இந்த விபத்தில் 10 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் கடுமையாக காயமடைந்த 20 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தித்துள்ளார்.