தெறிக்க விட்ட #Bumrah... சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய வங்கதேச அணி தேநீர் இடைவெளையில் 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த போட்டியில் எடுத்த 3வது விக்கெட்டின் மூலம் ஜஸ்பிரீத் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 400 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் டெஸ்ட்டில் 162 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளும், டி20யில் 89 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளை எடுத்த பும்ராவை ஆர்சிபி அணி வாழத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் தற்போது இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.