GOT ஸ்டைலில் இணைந்த பும்ரா - நாளை நடைபெறவுள்ள MIvsRCB போட்டியில் பங்கேற்பாரா?
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெற முடியாமல் போனது. தொடர்ந்து அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்தார்.
மும்பை அணியின் நட்சத்திர வீரரான அவர், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதை ஈடுகட்டுவதற்கு முன்பை அணி நிர்வாகம் சத்யநாராயண ராஜு, விக்னேஷ் புதூர் மற்றும் அஸ்வானி குமார் போன்ற புதிய வீரர்களை அணி அறிமுகப்படுத்தியது. இருப்பினும் மும்பை அணியின் தொடர் தோல்வி காரணமாக பும்ரா அணியில் இல்லாதது பின்னடைவுதான் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பும்ரா மும்பை அணியில் இணைந்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மும்பை அணி எக்ஸ் தளத்தில் GOT தொடர் ஸ்டைலில் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் தனது குழந்தையிடம் பும்ராவுக்கு அணியில் இணைவது தொடர்பாக மாஸ் இன்ரோ கொடுத்துள்ளார். பும்ரா மும்பை அணியில் இணைந்திருந்தாலும், நாளை(ஏப்ரல்.070 நடைபெறவுள்ள பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.