தமிழ்நாடு அரசின் வரவு செலவு விவரம்: 1 ரூபாயில் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு அரசின் வரவு செலவு விவரம் 1ரூபாயில் எவ்வளவு என்பது குறித்து விரிவாக காணலாம்....
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். கிட்டத்தட்ட 144பக்கம் நிதி நிலையை அறிக்கையினை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட்டை உரையை வாசித்தார்.
ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசின் வரவு விபரம் :
- பொதுக்கடன் 32.4 பைசா
- கடன் வசூல் மற்றும் மூலதன வரவு 1.1 பைசா
- மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 5.2 பைசா
- மத்திய அரசு வரிகளின் பங்கு 11.1 பைசா
- மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 43.4 பைசா
- மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 6.8 பைசா
ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசின் செலவு
- செயல்பாடுகளும் பராமரிப்புகளும் 3.3 பைசா
- மூலதனச் செலவு 10.5 பைசா
- வட்டி செலுத்துதல் 14.1 பைசா
- உதவித் தொகைகளும் மானியங்களும் 32.4 பைசா
- கடன்களை திருப்பிச் செலுத்துதல் 9.1 பைசா
- சம்பளங்கள் 18.7 பைசா
- ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் 8.3 பைசா
- கடன் வாங்குதல் 3.6 பைசா