For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Budget 2025 | மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்... 8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2025 - 26 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
06:37 AM Feb 01, 2025 IST | Web Editor
budget 2025   மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்    8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

Advertisement

தொடர்ந்து, இன்று (பிப். 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, பிப். 13 வரையும், 2ம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் முக்கிய எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜு, காங்கிரஸ் எம்.பி.க்கள் கௌரவ் கோகோய், சுரேஷ், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய், டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தொடரில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா, உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிகளவு நிதி ஒதுக்கப்படுமா? என்று தமிழக மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நிதிநிலை அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமான ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தொழில்நுட்ப வசதிக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement