மது போதையில் ஸ்கூட்டர் ஓட்டினாரா? சர்ச்சையில் சிக்கிய BTS சுகா!
கடந்த செவ்வாய்க்கிழமை பிடிஎஸ் குழுவைச் சேர்ந்த சுகா மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தென்கொரியாவின் சியோலில் உள்ள பிரபல வணிக நகரமான ஹன்னம்-டாங்கில் உள்ள ஒரு தெருவில் பிடிஎஸ் குழுவில் ஒருவரான சுகா கடந்த 26ஆம் தேதி விழுந்து கிடந்தார். அதனைப் பார்த்த அங்கிருந்த போலீசார் அவருக்கு உதவ முயன்றுள்ளனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்தனர். பின்னர் அவர் மது அருந்தியுள்ளரா என்பதை அறிவதற்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவர் அளவுக்கதிகமான குடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது தனக்கு கால் வலி எனவும் இதன் காரணமாகத்தான் கிக்போர்டு உள்ள ஸ்கூட்டரை ஓட்ட குறைவாக குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணையில் சுகா ஓட்டியது எலெக்ட்ரிக் கிக்போர்டு அல்ல, இருக்கையுடன் கூடிய மின்சார ஸ்கூட்டர் அல்லது ஸ்கூட்டர் பைக்குக்கு சமமான கொரிய ஸ்கூட்டர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் வழக்கு இன்னும் தீவிரமடைந்துள்ளது.
பலர் சுகாவின் இந்த செயலுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பிடிஎஸ்-லிருந்து இவரை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறை இந்த வழக்கை தவறாக கையாண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.