For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தடுப்புகளை தாண்டிச் சென்று 'அண்ணன்' மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிய 'தம்பி' ராகுல் காந்தி!

08:15 AM Apr 13, 2024 IST | Jeni
தடுப்புகளை தாண்டிச் சென்று  அண்ணன்  மு க ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிய  தம்பி  ராகுல் காந்தி
Advertisement

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கிச் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் தேசிய தலைவர்கள், மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் தங்களது கட்சி சார்பிலும், கூட்டணி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை செட்டிபாளையத்தில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங். மூத்த தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராகுல் காந்தி, வரும் வழியில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக ஸ்வீட்ஸ் வாங்கினார். சாலையில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி குதித்து கடைக்குச் சென்ற அவரை, ஸ்வீட் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கைகுலுக்கி வரவேற்றனர்.

என்ன வகை ஸ்வீட் வாங்கலாம் என்று ராகுல் காந்தி கேட்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ‘மைசூர் பாக்’ கொடுக்குமாறு கடை ஊழியர்களிடம் கூறினார். அங்கிருந்த பெண் ஒருவர் “யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார்?” என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர்,  “என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக” என்று பதிலளித்தார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி அங்கிருந்து பொதுக்கூட்டத்திற்கு கிளம்பினார்.

பொதுக்கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கு, கட்டியணைத்து வரவேற்றார். அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோவை காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Tags :
Advertisement