பிரிஸ்பேன் ஓபன் #Tennis - ஜிரி லெகேக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் டிமித்ரோவ் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து ஜிரி லெகேக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் நடப்பு சாம்பியனுமான டிமித்ரோவ்,செக்குடியரசின் லெகேக்காவை எதிர்கொண்டார். இதில் லெகாக்கா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள் : “நாம சேர்ந்து கட்டி வச்ச காதல் மாளிகை” – வெளியானது #KadhalikkaNeramillai படத்தின் 3வது சிங்கிள்!
முதல் சுற்றில் டிமித்ரோவ் 4-6 என்ற புள்கி கணக்கில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்றில் விறுவிறுப்பாக ஆடிய டிமித்ரோவ் புள்ளிகளை குவித்தார். ஆட்டம் 4-4 என்று சமநிலை இருக்கும்போது டிமித்ரோவ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செக்குடியரசு வீரர் ஜிரி லெகேக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.