குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
12:43 PM Jul 09, 2025 IST | Web Editor
Advertisement
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் இன்று காலை தீடிரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
Advertisement
அப்போது லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பாலம் விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.