பிரேசில் : புயலால் 400 விமானங்கள் ரத்து!
பிரேசிலில் வெப்ப மண்டல புயலால் மக்களின் இயல்பு வாழக்கை முடங்கியுள்ளது.
08:22 AM Dec 14, 2025 IST | Web Editor
Advertisement
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அந்த புயலால் பலத்த காற்று வீசியதில் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளது.
Advertisement
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கித் தவித்தன. வெப்ப மண்டல புயலால் பிரேசிலில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மேலும் புயல் காரணமாக விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.