Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம்... காதலியின் வீட்டின் முன்னே உயிரை மாய்த்துக்கொண்ட காதலன் - விபரீத முடிவெடுத்த காதலி!

கன்னியாகுமரியில் காதலி வீட்டின் அருகே காதலன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
03:23 PM May 22, 2025 IST | Web Editor
கன்னியாகுமரியில் காதலி வீட்டின் அருகே காதலன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Advertisement

கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின். இவரது மகன் ஜிதின். இவர் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அதே மருத்துவக்கல்லூரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படிக்கும், கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தையை சேர்ந்த மாணவியுடன் ஜிதினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது.

Advertisement

இதையும் படியுங்கள் : தேர்வில் தோல்வியடைந்த மகன்கள்.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு – நாமக்கலில் சோகம்!

இந்த நிலையில், ஜிதின் புத்தன்சந்தையில் உள்ள தனது காதலி வீட்டிற்கு வந்து பெண் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த நர்சிங் மாணவிக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த ஜிதின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அவர் புத்தன்சந்தை வந்து காதலியின் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி குளியலறையில் இருந்து விஷ மருந்தை குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  ஜிதினின் அண்ணன் ஜோபின் ஜெபி இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
hospitalKanyakumariKeralalovernews7 tamilNews7 Tamil UpdatesPolice
Advertisement
Next Article