புத்தக கண்காட்சி நிறைவு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகளை வெளியிட்டார்.
02:08 PM Jan 18, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 16ம் தேதி முதல் இன்று (18) வரை இந்த பன்னாட்டு புத்தக திருவிழா நடைபெறுகிறது.
Advertisement

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (18.01.2025) புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதுப்பித்த 75 நூல்களை வெளியிட்டார்.