கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு, அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது வீடு திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு 2 மணிக்கு வெடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதையும் படியுங்கள் : “என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி புதிய அறிக்கை!
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நேற்று முன்தினம் திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் நிபுணர்கள் சோதனை செய்ததில், அது புரளி என்றும் தெரிய வந்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கும் பல்வேறு அரசு அலுவலங்களுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.