ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்!
இந்திய ரிசர்வ் வங்கிக்கு இன்று ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தாண்டில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் செய்தி ரஷ்ய மொழியில் இருந்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து மாதா ரமாபாய் மார்க் (எம்ஆர்ஏ மார்க்) காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரிசர்வ் வங்கி முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவிதமான ஆபத்தான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இன்று டெல்லியில் உள்ள 6க்கும் மேற்பட்ட முக்கிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலை தொடர்ந்து தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிகள் முழுவதும் சோதனையில் ஈடுப்பட்டனர். தீவிர சோதனைக்கு பின், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.