Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரோடு ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

11:13 AM Nov 01, 2023 IST | Student Reporter
Advertisement

ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து காவல்துறையினர்  தீவிர சோதனை மேற்கொண்டர்.

Advertisement

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் செய்த
மர்ம நபர்,  ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.  இதையடுத்து ஈரோடு எஸ்பி ஜவஹர் உத்தரவின்பேரில் ஈரோடு நகர டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் கயல் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில்  கார் பார்க்கிங்,  இருசக்கர வாகனம் பார்க்கிங்,  ரயில்வே பார்சல் சர்வீஸ் கிடங்கு,  ரயில்வே நடைபாதையில் உள்ள கடைகள் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

தீவிர சோதனையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.  இதில் அதிர்ஷ்டவசமாக எந்த வெடிகுண்டு கண்டறியவில்லை,  இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே ஆண்டில் ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் இரண்டாவது முறையாக அரங்கேறி இருப்பது பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதற்கு முன்னதாக கடந்த முறை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தது
குறிப்பிடத்தக்கது.

Tags :
bomb threatErodeErode railway stastioninvestigationPolicerailway stastionTamilNadu
Advertisement
Next Article