For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்ட #SitaramYechury -யின் உடல்!

05:53 PM Sep 14, 2024 IST | Web Editor
டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்ட  sitaramyechury  யின் உடல்
Advertisement

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்வதற்கான ஆவணங்களில் அவரது குடும்பத்தினர் கையெழுத்திட்டு ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் (செப். 12) உடல்நலக் குறைவால் காலமானார். சுவாசப் பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராயச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல், டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, இன்று (செப். 14) டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக் கொண்டுவரப்பட்டு சீதாராம் யெச்சூரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொருளாளரும் மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதே போல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, அவரது உடல் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்வதற்கான ஆவணங்களில் அவரது குடும்பத்தினர் கையெழுத்திட்டனர். தொடர்ந்து அவரது உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

“தோழர் சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement