Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மரத்தில் தொங்கிய இளைஞர், சிறுமியின் உடல்கள் மீட்பு... ஒடிசாவில் அதிர்ச்சி!

ஒடிசாவில் இளைஞர் மற்றும் சிறுமியின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
01:43 PM Apr 27, 2025 IST | Web Editor
ஒடிசாவில் இளைஞர் மற்றும் சிறுமியின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Advertisement

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் அம்பானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாலா கிராமத்தில் 23 வயதுடைய இளைஞர் மற்றும் 17 வயதுடைய சிறுமியின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாறியில் மறைத்து வைத்த நபர்… போலீசில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி பின்னணி!

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. உயிரிழந்த இருவரும் காதலித்து வந்திருக்கலாம் என்றும், வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : “பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது… கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – பிரதமர் மோடி பேச்சு

இதனல் மனமுடைந்த இருவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டிருக்கலாம் எனவும் எண்ணுகின்றனர். இருப்பினும் இவர்கள் உயிரைக் மாய்த்துக் கொண்டார்களா? அல்லது யாரும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இளைஞர் மற்றும் சிறுமியின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags :
bodiesgirlhospitalKaodalanews7 tamilNews7 Tamil UpdatesodishaPolicetree
Advertisement
Next Article