கிரிக்கெட் விளையாடிய புளூஸ்டார், சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர்!
புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் ஒரே நேரத்தில் வெளியாகும் நிலையில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இத்திரைப்படத்தை நீலம் புரோடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜ், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் நாளை வெளியாகிறது. சத்யராஜ், தலைவாசல் விஜய் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. இந்த இரண்டு படங்களுமே நாளை வெளியாக உள்ளன.
இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், இரண்டு படக்குழுவிடரும் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். மேலும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பா. இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி, அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா என இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர்.