For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விருதுநகரில் முற்றுகை போராட்டம் - 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!

02:52 PM Oct 31, 2023 IST | Student Reporter
விருதுநகரில் முற்றுகை போராட்டம்   1000 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு
Advertisement

பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் அண்மையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சில அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் வருகையை அதிகமாக காட்டி முறைகேட்டில் ஈடுபடுவதை கண்டுபிடித்து பணியாளர்களை கண்டித்திருக்கிறார். அதோடு, மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார். இதனை அடுத்து ஒரு சில மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணியும் முடிந்துள்ளது. இதனை கண்டித்து  அங்கன்வாடி பணியாளர்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.

இதையும் படியுங்கள்;முகேஷ் அம்பானி-க்கு ஒரே வாரத்தில் 3வது கொலை மிரட்டல்… ரூ.400 கோடி கேட்ட மர்ம நபர்!

இதனால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சில பேருக்கு பணிமாறுதல் வழங்கி உத்தரவிட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள்,  ஆட்சியரை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர். மேலும் நுழைவுவாயிலில் உள்ள கேட்டின் மீது ஏறி முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதில் 1000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.  அங்கன்வாடி மையங்களில் கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து தரப்பினரும் பணி செய்து வரும் நிலையில், அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதி செய்து தர ஆட்சியர் மறுப்பதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.

அப்பொழுது காவல்துறைக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போரட்டத்தை கைவிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் கலைந்துச் சென்றனர்.

Tags :
Advertisement