For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு - விளக்கமளித்த நிறுவனம்!

07:55 PM Jun 17, 2024 IST | Web Editor
ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு   விளக்கமளித்த நிறுவனம்
Advertisement

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

கடந்த ஜூன் 9-ம் தேதி பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற நபருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சில நொடிகள் உணவை மென்று சாப்பிட்டப் பிறகுதான் பிளேடு இருந்ததை கவனித்ததாகவும், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும், இந்த உணவை ஒரு குழுந்தை சாப்பிட்டிருந்தால் என்ன ஆவது எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி ராஜேஷ் டோக்ரா,

“எங்கள் நிறுவனத்தின் விமானத்தில் பயணத்தவரின் உணவில் பிளேடு இருந்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. விசாரணைக்கு பிறகு சமையலின்போது காய்கறி வெட்டும் கருவியில் இருந்த பிளேடு விழுந்துள்ளது தெரியவந்தது. இனிமேல் காய்கறிகளை வெட்டிய பிறகு இயந்திரத்தை சோதனை செய்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement