For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம் - டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியது!

04:08 PM Apr 04, 2024 IST | Web Editor
பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம்   டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியது
Advertisement

பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம்  டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிற ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணியளவில் வேலூரிலும், மாலை 6 மணியளவில் தென்சென்னையிலும் பிரதமர் மோடி ரோட்ஷோ நடத்துகிறார்.  இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி, நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, அங்கு காலை 11 மணியளவில் ரோட்ஷோ நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார். இதேபோல ஏப்ரல் 13-ம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ஏப்ரல் 14-ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று, வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் குழு உறுப்பினர்கள் அடங்கிய 27 பேர்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள், தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.  தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க பாஜக அறிவித்த செல்போன் எண், நமோ செயலி, சமூக வலைதளங்கள் வாயிலாக  பெறப்பட்ட கருத்துக்கள் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த தேர்தல் அறிக்கையானது பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டு குறிப்பாக விவசாயிகள், பெண்கள் ,  இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Tags :
Advertisement