ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா டிச.15-ல் பதவியேற்பு...
ராஜஸ்தான் முதலமைச்சராக டிச.15 ஆம் தி பாஜகவின் பஜன்லால் சர்மா பதிவியேற்கிறார்.
ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்வரை தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் எம்எல்ஏவான சர்மா, பாஜக சட்டமன்ற கூட்டத்தில் ராஜ்நாத் சிங், சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் முதன்முறையாக முதல்வராக நியமிக்கப்பட்டார்.
டிசம்பர் 15 (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணிக்கு ஆல்பர்ட் ஹாலுக்கு வெளியே பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வித்யாதார் நகர் எம்எல்ஏ தியா குமாரி மற்றும் பிரேம்சந்த் பைரவா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாகவும், அஜ்மீர் வடக்கு எம்எல்ஏ வாசுதேவ் தேவ்நானி பேரவைத் தலைவராகவும் பதவி ஏற்க உள்ளனர்.