”திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும்” - நயினார் நாகேந்திரன் பேச்சு..!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2026 சட்டமன்ற தேர்தலையோட்டி தமிழ்நாடு முழுவதும் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான தொடக்க விழா மதுரை அண்ணாநகரில் நடைபெற்றது. சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.
இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்திற்க்கான பாடல் வெளியிட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அவர் பேசியது,
திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. வல்லபாய் படேலுக்கு பிறகு வந்த இரும்பு மனிதர் அமித்ஷா. அர்டிக்கல் 370 ஐ எடுத்து காட்டியவர் அமித்ஷா.
திமுக ஆட்சி நடத்தவில்லை வெறும் காட்சிகளாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு முன்னுரை எழுதி உள்ளார். பாஜக திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும். திமுக ஆட்சிக்கு முடிவு எழுத 177 நாட்கள் உள்ளது. ஒவ்வொரு நாளும் திமுகவுக்கு முடிவுகள் எழுதப்பட்டு வருகின்றது. திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனபது தான் பிரச்சாரத்தின் நோக்கம்.
2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் குறைக்க உள்ளதாக தகவல். பாஜக - அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது. திமுகவினர் நன்றி மறந்தவர்கள், முரசொலி மாறன் இறப்புக்கு நேரில் அஞ்சலி செலுத்திய வாஜ்பாயை அவதூறாக பேசினார்கள்
கச்சத்தீவு ஏன் தாரை வார்க்கப்பட்டது என திமுகவினர் கூறவில்லை. திமுகவினர் தமிழை விற்றுப் பிழைத்தவர்கள். மத்திய அரசின் நிதிகளால் மாநிலத்திற்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அதிக அளவில் மத்திய அரசு நிதிகளை பெற்று தந்துள்ளார். அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர்
கரூரில் நடந்த நிகழ்வு இனி எந்த காலத்திலும் நடக்க கூடாது. கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்துக்கு காவல்துறையும், தமிழக அரசும் தான் காரணம். கள்ளச்சாராயம் சாவுக்கு 10 இலட்சம் கொடுக்கும் வினோதமான கட்சி திமுக” என்று தெரிவித்தார்.